அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
இதனையடுத்து எதிற்மறையான விமர்சனத்திற்கு தள்ளப்பட்டது. படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு நயன்தாரா மீது, புகார் அளித்ததது.
அதன்படி, இப்படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டது. இந்த நிலையில், அன்னபூரணி பட சர்ச்சை குறித்து நடிகை நயன்தாரா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
அன்னபூரணி மூலம் ஒரு நேர்மையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள், எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்திவிட்டோம். கடவுளின் மீது மிகவும் நம்பிக்கை கொண்ட நான், இதை உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அதையும் மீறி உங்களை புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது படக்குழுவின் நோக்கமல்ல. எங்களை அறியாமலேயே சிலரது மனதை புண்படுத்தி இருப்பதாக உணர்கிறோம். மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாகவும் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
அன்னபூரணி படம் வெறும் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படமல்ல, ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்தோம். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான், ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
குவியும் வழக்கு: அன்னபூரணியால் அப்செட்டில் நயன்தாரா?
மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்கோ, படக்குழுவுக்கோ இல்லை. நேர்மறையான எண்ணங்களை பரப்புவது ஒன்றே தனது திரைப்பயணத்தின் நோக்கம் என்றும் தனது அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…