Categories: சினிமா

அன்னபூரணி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? நயன்தாராவின் மவுசு குறையவே இல்லை!

Published by
பால முருகன்

நடிகை நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான “அன்னபூரணி”  திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளள்ளார். படத்தை எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளளார்கள்.

படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாரா ஜெய், சத்யராஜ், கூட்டணி இணைந்துள்ளதாலே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்.

படத்துக்கு 10 கோடி விளம்பரத்துக்கு 5 கோடி? அதிர வைக்கும் நயன்தாரா சம்பளம்!

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகை நயன்தாரா சமையல் செய்யும் பெண்ணாக நடித்து இருக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக 1.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் 14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இருந்தாலும், விமர்சனம் படத்திற்கு எப்படி கிடைத்தாலும் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள காரணத்தாலும்  வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்காமல் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ஒரு திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 1.5 கோடி வசூல் செய்கிறது என்றால் அது சாதாரண விஷயமே இல்லை. இந்த மாதிரி அவருடைய படங்களுக்கு ஓப்பனிங் கிடைக்க முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நயன்தாராவின் மவுசு கொஞ்சம் கூட குறையவே இல்லை. இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

4 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

6 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

7 hours ago