இது தான் லாஸ்ட் அப்டேட்.. அண்ணன் வராரு வழிவிடு! ‘தி கோட்’ ப்ரோமோ வீடியோ.!
விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில், கடைசி அப்டேட்டாக அசத்தலான புரோமோ வெளியானது.
ANNE VARAR VAZHI VIDU ???????? #ThalapathyThiruvizha starts from Tomorrow #GOATReleasePromo ( Last update ❤️❤️ ) pic.twitter.com/KXLLLnKAKb
— Archana Kalpathi (@archanakalpathi) September 4, 2024
விஜய் தவிர, இந்த படத்தில் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் துணை வேடங்களில் டித்துள்ளனர்
மேலும், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இப்படத்தில் தோன்றவுள்ளார். இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி நாளை தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாக தயாராக உள்ளது.
இந்த படத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்.5, 6 ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கோரப்பட்டது. செப்டம்பர் 5-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஒரு சிறப்புக் காட்சியை தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது.