சிறகடிக்க ஆசை சீரியல்..சுருதி மீனா சண்டையால் மனமுடைந்த அண்ணாமலை ..!
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 3] எபிசோடில் முத்து மீனா ரவி சுருதி நாடக சண்டை போடுகிறார்கள் இதை உண்மை என விஜயா மகிழ்ச்சி அடைகிறார்.
ரவி -சுருதி ,முத்து- மீனா ரூம்ல விஜயாவுக்கு கேட்கிற மாதிரி சத்தமா சண்டை போட்டுட்டு இருக்காங்க.. இதைக் கேட்டு விஜயா ரொம்ப சந்தோசமா இருக்காங்க ..ஆனா அண்ணாமலை கவலைப்படுறாரு ..ரூம விட்டு வெளிய வந்த முத்து கிட்ட தனியா கூப்பிட்டு போய் பேசுறாரு என்னடா முத்து வீட்டுக்கு வந்த ரெண்டு மருமகளும் இப்படி சண்டை போடுறாங்க.. மீனா கிட்ட நீ கொஞ்சம் சொல்லி வைக்க மாட்டியா அப்படின்னு கேக்குறாங்க.. இதெல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா.. இதுக்கு உடனே முத்து சொல்றாரு அப்பா இதெல்லாம் நாடக சண்டை. என்னடா சொல்ற ஒன்னும் புரியலையே.. அப்பா மீனாவுக்கு பல குரல் சப்போர்ட் பண்றது அம்மாவுக்கு பிடிக்கல. அதனால அம்மா பல குரலோட அம்மா கிட்ட மீனா கூட சேர்ந்துகிட்டு ஸ்ருதி என்ன மதிக்கிறதே இல்லை என்ன புள்ள வளர்த்து இருக்கீங்க அப்படின்னு அம்மாவோட ராஜா தந்திரத்தை பயன்படுத்தி இருக்காங்க.
இதுக்காக பல குரலோட அம்மா மீனா வந்து பயங்கரமா திட்டி இருக்காங்க.. என் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்காத.. ஸ்ருதி கூட பேசாத அப்படி எல்லாம் சொல்லிட்டு போயிருக்காங்க.. இதெல்லாம் தெரிஞ்சு எனக்கு கோவம் வந்துச்சு உடனே நான் மீனா கூப்பிட்டு பல குரல் அம்மாவ திட்டலாம்னு தான் போனேன் ஆனா அதுக்குள்ள மீனா என் மனச மாத்திட்டா.. கோபப்படாதீங்க இதுக்கெல்லாம் காரணம் அத்தை தான் அத்தைக்கு நானும் சுருதியும் க்ளோசா இருக்கிறது பிடிக்கல அதனால அவங்க முன்னாடி நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டாலே போதும் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைச்சுரும் இதுக்கு அப்புறம் அவங்க எங்கள பிரிக்கிறதை பத்தி யோசிக்க மாட்டாங்க அப்படின்னு சொல்லிடறாங்க .இதைக் கேட்ட முத்துவும் சரி நீ உடனே பல குரலுக்கு போன் பண்ணி சொல்லிரு.
சுருதிக்கு மீனா கால் பண்ணி விஷயத்தை சொல்லிடறாங்க. இப்ப வீட்டுக்கு வர்ற முத்து சத்தமா சண்டை போடுற மைண்ட்ல கத்திக்கிட்டு ரவி ரூம்குள்ள போறாங்க. கதவு சாத்திட்டு நாலு பேருமே பிஸ்கட் சாப்பிட்டுக்கிட்டே சண்டை போடுற மாதிரி நடிக்கிறாங்க. இதெல்லாம் பாத்துட்டு விஜயா உண்மையாவே சண்டை தான் போட்டுட்டு இருக்காங்கன்னு சந்தோஷப்பட்டு இருக்காங்க. இதெல்லாம் முத்து அண்ணாமலை கிட்ட சொல்லவும் அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்படுகிறார். பரவாயில்லையே நீங்க இவ்வளவு ஒற்றுமையா இருக்கிறீங்க எப்பவுமே நீங்க இப்படியே இருங்க அப்படின்னு சொல்றாரு. இப்போ சுருதி அவங்க அம்மாவுக்கு கால் பண்ணி திட்றாங்க ..சுதாவும் நீ மீனா கூட சேராத சுருதி.. உன்னோட ஸ்டேட்டஸ்க்கு இது சரி இல்ல. இதை கேட்ட சுருதி நான் யார் கூட பேசணும் பேச கூடாதுன்னு நீங்க முடிவு பண்ணாதீங்க மம்மி என் லைஃப்ல நீங்க தலையிடாதீங்க அப்படின்னு கோவமா சொல்லிட்டு போனை வச்சுடுறாங்க.
ரோகினி ஓட அம்மாவுக்கு மயில்டா அட்டாக் வந்து இருக்கு ..ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணி இருக்காங்க.. க்ரிஷ் பாக்கவே பரிதாபமா நின்னு அழுதுட்டு இருக்கான் ரோகிணி வந்து பார்த்துட்டு டாக்டர் கிட்ட என்னாச்சுன்னு கேக்குறாங்க ..அவங்களுக்கு மயில்டு அட்டாக் வந்திருக்கு.. நீங்க கூடவே இருந்து பாத்துக்கணும் அப்படின்னு சொல்லிடறாங்க ..ரோகினி அவங்க அம்மாகிட்ட பேசுறாங்க.அதுக்கு ரோகினி அம்மா சொல்லுறாங்க எனக்கு க்ரிஷ நெனச்சா தான் பயமா இருக்குது நான் போயிட்டு அவனை யாரு பாத்துக்குவா எனக்கு அந்த கவலை தான் அப்படின்னு சொல்றாங்க.. ரோகிணி என்ன சொல்றதுன்னு தெரியாம நின்னுட்டு இருக்காங்க இப்போ அவங்க கூட வச்சுக்க போறாங்களா.. இல்ல தனியா விட போறாங்களான்னு வரப்போற எபிசோடில் பார்க்கலாம்.