அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட் விலை 2925 என தவறாக பதிவிட்டு நெட்சன்களிடம் மாட்டிக்கொண்டார் இயக்குனர் மு.களஞ்சியம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வாங்கி வெளியிடுகிறது.
நேற்று முதலே பல தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. தற்போது முக்கால்வாசி தியேட்டர்களில் ஆன்லைன் முன்பதிவு என்பதால், டிக்கெட் விலை நேரடியாக தெரிந்துவிடும்.
இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட் விலை 2925 ரூபாய் இருக்கிறது. இதனை முதலமைச்சர் கேட்கமாட்டாரா? படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் இது நியாயமா என்பது போல கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார்.
ஆனால், உண்மையில், அந்த டிக்கெட்டில் 15 பேருக்கான மொத்த விலை போடப்பட்டுள்ளது. அதிலும், M வரிசையில் 1 இல் இருந்து 15 சீட் நம்பர் எனவும் தெளிவாக போடப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் அவரை வச்சி செய்து வருகின்றனர்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…