இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “விக்ரம்”. அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். படம் மிகவும் அருமையாக இருக்கிறது விக்ரம் 3 பார்ட்டுக்கு வெயிட்டிங் என தெரிவித்து வருகிறார்கள்.
படத்தின் இறுதிக்காட்சி 7 நிமிடத்தில் மட்டும் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வருவார். அந்த 7 நிமிட காட்சியை பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் கை தட்டகள் நிற்கவே இல்லை. அந்த அளவிற்கு கொடூர வில்லனாக சூர்யா மிரட்டி இருந்தார்.
இந்த நிலையில், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து சூர்யா ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் ” அன்பே கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது. உங்களுடன் திரையுலகில் வரும் கனவும் நினைவாகியுள்ளது. இதைச் செய்ததற்கு இயக்குனர் லோகேஷ்கனகராஜிற்கு நன்றி. விக்ரமின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் காதல் நிரம்பி வழிகிறது.” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…