Ankita Lokhande : சினிமாவில் இருக்கும் நடிகைகள் முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாகவே பேசுவதை நாம்பார்த்திருப்போம் . அப்படி பல நடிகைகள் இன்னும் வரையுமே வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் ஹிந்தி சீசன் 17 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அங்கிதா லோகண்டே சமீபத்திய பேட்டி ஒன்றில் 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க என்று வேதனையுடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கு சினிமாவில் நடிக்க அதிகமாக ஆர்வம் இருந்த காரணத்தால் தென்னிந்தியத் திரையுலகில் ஆடிஷனுக்குச் சென்றிருந்தேன். ஆடிஷன் முடிந்த பிறகு எனக்கு கால் வந்தது நீங்கள் செலக்ட் ஆகி உள்ளீர்கள் என்று கூறினார்கள். இதனை கேட்டவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதை அம்மாவிடம் சொல்லி மகிழ்ந்தேன். ஆனால், எப்படி அவ்வளவு எளிதாக தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது.
இருந்தாலும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனவே அந்த நாள் முழுவதும் நான் தூள்ளி குதித்துக்கொண்டு இருந்தேன். பிறகு நடிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துப் போட வர சொன்னார்கள். அப்போது என்னுடன் வந்தவரை வெளியில் இருக்கச் சொன்னார்கள். உள்ளே சென்றதும் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்யச் சொன்னார்கள்.
இதனை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அப்போது எனக்கு 19 வயது தான். என்னை ஹீரோயினாக்குவதில் என்ன அட்ஜஸ்ட்மென்ட் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்காக தயாரிப்பாளருடன் ஒரு இரவைக் கழிக்கச் சொன்னார்கள். அப்புறம் நினைக்கிறேன்.. உங்க தயாரிப்பாளருக்கு திறமை தேவையில்லை.. பக்கத்துல ஒரு பொண்ணுதான் வேணும் என்று பிறகு முடியாது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இது தான் தன்னுடைய வாழ்விலே மறக்க முடியாத சம்பவம் என்றும் அங்கிதா லோகண்டே கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அங்கிதா லோகண்டே தற்போது சுதந்திர வீர் சாவர்க்கர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…