அவருக்கே இந்த கதின்னா? ‘சென்னையை பாக்கவே பயமா இருக்கு’…அனிதா சம்பத் வேதனை!!
சென்னை : தேசியவாத கட்சிகளின் பிரதான ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடைய இறப்புக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும் என்றும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், செய்தி தொகுப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் ஆம்ஸ்ட்ராங்க் சார் கொலை அதிர்ச்சியளிக்கிறது எனவும், வட சென்னையில் இன்றைக்கு இருக்கும் சட்ட ஒழுங்கின் நிலை பதற்றத்தை வரவழைக்கிறது என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வீடியோவில் பேசியதாவது ” நான் படித்த காலத்தில் இருந்து பெரம்பூரில் தான் இருக்கிறேன். என்னுடைய அம்மா வீடு இப்போதும் நார்த் மெட்ராஸ் பகுதியில் தான் இருக்கிறது.
அப்போதெல்லாம் நார்த் மெட்ராஸ்க்கு உள்ளே வரும் போது அவ்வளவு சந்தோசமாக இருக்கும். ஆனால், இப்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது ரொம்பவே பயமாக இருக்கிறது. மெட்ராஸ்க்கு போகணும்னு நெனச்சாலே ரொம்ப பயமாக இருக்கிறது. குறிப்பாக நேற்று ஒரு தேசிய கட்சியை சேர்ந்த தலைவரான ஆம்ஸ்ட்ராங் சாரை யாரென்று தெரியாத ஒரு 6 பேர் கொலை செய்துவிட்டு போயிருக்கிறார்கள். இந்த தைரியம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எங்கு இருந்து வந்தது?
இந்த சம்பவத்தை கேட்டவுடனே மனசு பதறுது. இதில் கூடுதலான ஒரு பதட்டம் என்னன்னா இதற்கு பிறகு கொலை செய்த்தவர்கள் 6 பேரை கைது செய்துவிட்டோம் என்று காட்டுவாங்க. அந்த ஆறுபேரும் நெஜமாவே கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களா? என்பது தெரியவில்லை. இல்ல யாராச்சு கூட்டு வந்து சரண்டர் பண்ண வைப்பாங்களா.அப்படின்னு இன்னொரு பக்கம் பயமாக உள்ளது. ஒரு தேசிய கட்சியில இருக்காங்க. நெறைய ஆளுங்க இருப்பாங்க. அவங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண வீட்ல இருக்கருவங்க வயசானவங்க அவங்க எல்லாம் எப்படி வாழ்வாங்க? அப்போ எப்படி நம்பி நாங்க இனிமேல் ஆன்லைன்ல ஆடர் பண்ணுவோம். எப்படி டெலிவரி வாங்குவோம்.
ஹெல்மெட் போடாம போனா கொலை பண்ணவன் மாறி நிக்க வைக்குறிங்க இப்போது இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து இருக்கிறது. 6 பேர் கையில் அரிவாளுடன் சென்றதை எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்? சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் நல்லா பாக்குறீங்க பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் விட்டுறீங்க காசுக்காக அடுத்துவங்கள கொலை பண்ணி சாப்பிட்டா அந்த சாப்பாடு எப்படி தொண்டையில் இறங்கும்? காசை வாங்கிவிட்டு கூலிப்படையாக வேலை செய்து என்ன கிடைக்கப்போகிறது வேலை இல்லை என்றால் என்னிடம் தனியாக கேளுங்கள் நான் 25-ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் வேலையை வாங்கி தருகிறேன்” எனவும் அனிதா சம்பத் கூறியுள்ளார். அவர் பேசியுள்ள அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நான் பெரம்பூரில் பிறந்து வளர்ந்தவள். ஆம்ஸ்ட்ராங்க் சார் கொலை அதிர்ச்சியளிக்கிறது. சென்னை பதற்றமாக இருப்பதை உணர்கிறேன்.
சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பதில் சந்தேகம் இருக்கிறது.
– பிரபலப் தொகுப்பாளர் அனிதா சம்பத் pic.twitter.com/6tDPZi2vPH
— காளி (@kali15061996) July 6, 2024