லியோ படம் பெரிய வெற்றியடைந்து இருக்கும் நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுயடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், சினேகா, லைலா மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி 68 படத்திற்கான அப்டேட் எதாவது வெளியாகுமா என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தார்கள்.
அதன்படி, படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடலை மதன் கார்க்கி எழுதி அதனை அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடல் செம்ம பெப்பியான பாடலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தளபதி 68 இந்த படத்தின் ரீமேக்கா? வெளியான சீக்ரெட் தகவல்!
யுவன் இசைமைக்கும் தளபதி 68 படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் பாடவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார். யுவன் இசையில் அனிருத் பாட்டு பாடுவது இது முதல் முறையல்ல இதற்கு முன்னதாக, பலூன் படத்தில் பாடியிருக்கிறார். ஏற்கனவே, பர்ஸ்ட் சிங்கிள் வெறித்தனமாக இருக்கும் என்றும், அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…