தமிழ் சினிமாவில் 3 என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அறிமுகமானவர் அனிருத். இதுவரை தமிழில் 26 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுகிறது. இவரது பின்னணி இசைக்கு மட்டும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு தான் இசையமைத்து வருகிறார். ரஜினியிலிருந்து சிவகார்த்திகேயன் வரை, அணைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்துவிட்டார். கமலின் நடிப்பில் இன்று வெளியான விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார்.
இப்படி, தமிழில் டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் தற்போது பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார். ஆம் பாலிவுடின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
இந்த நிலையில், பாலிவுட்டில் களமிறங்கிய அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” கனவுகள் நனவாகும்.! பாட்ஷாவுக்கே இசையமைக்கிறேன் நன்றி ஷாருக்கான் சார். நன்றி மற்றும் என் சகோதரன் அட்லீயை நினைத்து பெருமை கொள்கிறேன் மேலும் இது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் ஜவான் டீசர் இதோ தயவுசெய்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…