சமீப காலமாக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷை ஆகிய இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், இப்பொது திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.
கீர்த்தியும் அனிருத்தும் ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், அஞ்ஞாதவாசி என பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தொழில் ரீதியாக அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறப்பட்டாலும், சில நாட்களுக்கு முன் இருவரின் திருமணம் பற்றிய வதந்தி செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கீர்த்தியின் தந்தையும் தயாரிப்பாளரும் ஜி சுரேஷ் இந்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். அனிருத்துடன் திருமணம் கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி கேட்டபோது, அந்த தகவல் ஒரு துளி கூட உண்மை இல்லை என்றும் கீர்த்தி மற்றும் அனிருத் பற்றி ஒருவர் செய்தி வெளியிடுவது இது முதல் முறை அல்ல என்று கூறிய அவர், கடந்த காலங்களில் பல செய்திகள் இது போல் வெளிவந்துள்ளன என்றும் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு, நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயைச் சேர்ந்த ஃபர்ஹான் என்ற தொழிலதிபருடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் வந்தன. அவர் சமூக வலைத்தளங்களில், ஒரு புகைப்படத்தை வெளியிட்ட பிறகு உறவு மற்றும் திருமண வதந்திகள் தூண்டியது. இருப்பினும், இந்த செய்தி வைரலான பிறகு, புகைப்படத்தில் இருப்பவர் தனது நண்பர் என்று கீர்த்தி சுரேஷ் தெளிவுபடுத்தினார்.
மேலும், கீர்த்தியின் தந்தையும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபருடனான உறவு குறித்து தெளிவுபடுத்தினார். கீர்த்தி சுரேஷ் எந்த துபாயை சேர்ந்த தொழிலதிபருடனும் டேட்டிங் செய்யவில்லை என்றும், வைரலான புகைப்படத்தில் அவர் போஸ் கொடுத்தது அவரது நல்ல நண்பர் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…