சென்னை: இந்தியன்-2 படத்தின் முதல் பாடல் இப்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள “இந்தியன் 2” படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலை படக்குழு வெளியிட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, ஸ்ருதிகா சமுத்திரலாவுடன் இணைந்து பாடியுள்ளார்.
தமிழ் உட்பட 3 மொழிகளில் வெளியான இந்த முதல் பாடலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தற்போதைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும், தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில், இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது.
இந்த படத்தில் காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது.
வழக்கமாக இளைஞர்களையும் குழந்தைகளையும் குத்தாட்டம் போட வகையில் பாடல்களில் இசையமைக்கும் ராக்ஸ்டார் அனிருத், இந்த முறை தனது வித்தியாசமான முறையில் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இதனை கேட்ட பலரும் இது அனிருத் இசையா? என்று வியப்பில் ஆழ்ந்தனர். முதல் பாகத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த பாடலுக்கு எபெக்ட் போட்டு இருக்கிறார் போல் தெரிகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…