தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் அனிருத். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் அணைத்து ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார்.
அனிருத் இசையமைக்கும் அணைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் இப்போது உள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து விடுவதால், அவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து குவிகிறது.
இந்த நிலையில், அனிருத் இசையில் வெளியாகவுள்ள படங்களை பற்றி பார்க்கலாம். விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், டான், இந்தியன் 2, தலைவர் 169, அஜித்குமார் 62 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதை தவிர்த்து தெலுங்கிலும் இரண்டும் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய் தேவர கொண்டா நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்திற்கும். ஜூனியர் என்டி ஆர் நடிக்கும் ஒரு படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இப்படி தமிழில் கலக்கி வரும் அனிருத் தெலுங்கிலும் இசையமைக்க உள்ளதாக பரவும் தகவல்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழை போல தெலுங்கிலும் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…