ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிருத்தின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக பேட்ட படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளது.
நடிகர் தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற தனது முதல் பாடலின் மூலம் சர்வதேச கவனம் பெற்றது குறிப்பிடத்தக்க்து.
அனிருத், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் இசையமைத்து விட்டார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதன்முறையாக ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு இசையமைத்து வருகிறார்.நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய அனிருத்துக்கு பேட்ட படக்குழு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளது. வீடியோவில் ராக் ஸ்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அனிருத், இந்த தலைமுறைக்கான இசையமைப்பாளர் புகழாரம் பேட்ட படக்குழுவை தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் வாயிலாக கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…