பார்ன் பாத்திருக்கியா…பொண்ணுங்க குனியும் போது எட்டி பாத்திருக்கியா? சர்ச்சையை கிளப்பும் ‘அனிமல்’ டீசர்!
அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தில், இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 18+ கொண்ட கதையை ராவாக படமெடுக்கும் சந்தீப் ரெட்டி, இந்த படத்தையும் அவ்வாறு எடுத்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள டீசரை பார்க்கும் பொழுது, சாக்லேட் பாயாக இருக்கும் ரன்பீர் கபூர், கொடூரனாக மாறும் காட்சிகள் பங்கமாக அமைந்திருக்கிறது. இறுதியில் ரன்பீர் கபூர் ரத்தம் வெள்ளத்தில் படுத்திருக்கும் காட்சிகளுடன் முடிவடைகிறது.
இரண்டு நிமிடம், 26 வினாடிகள் கொண்ட டீச்சரின் தொடக்கத்தில், ரன்பீர் கபூர் – ராஷ்மிகா மந்தனா கட்சிகளில் காதலராக சுமுமாக தொடங்க, கருத்து வேறுபாடு காரணமாக ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனாவிடம் தனது ஆக்ரோஷத்தை காண்பிக்கிறார்.
அப்பொழுது, ரன்பீர் கபூர் உரையாடலின்போது, என்னிடம் என்ன வேண்டுமானாலும் கேளு அப்படினு கூறி எடுத்துக்காட்டாக, “பார்ன் பாத்திருக்கியா, பொண்ணுங்க குனியும் போது எட்டி பாத்திருக்கியா” என கேவலமாக கேளு கவலையில்லை என்று டயலாக் பேசியுள்ளார். இந்த டயலாக் சர்ச்சையை கிளப்புவது போல் அமைந்துள்ளது.
Guysssss! So THIS is the teaser.. ???????? and I LOVE IT! ❤️????
YOU like? ❤️
Imagine if this is only a teaser.. imagine the rest that’s going to come! ????????????????
excitement increasing fully.. ????❤️
I really hope you enjoy everything about this film till the end.. ❤️????#Animal in… pic.twitter.com/z1oQfrTx0q— Rashmika Mandanna (@iamRashmika) September 28, 2023
கடந்த காலம் – நிகழ்காலம் என இரு கெட்டப்பில் ரன்பீர் முதன்முறையாக ஒரு மாஸ் ரோலில் நடிக்கிறார். ரன்பீரின் தந்தையாக அனில் கபூரின் பாத்திரம் பலமாக அமைந்துள்ளது. மேலும், வில்லனாக வரும் பாபி தியோல் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இறுக்கிறார்.