ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது.
டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இப்படம், இதுவரை ரூ. 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், முராத் கெடானி மற்றும் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
மேலும் இதில், ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கிடையில், எதிர்பார்த்ததை விட டபுள் வெற்றியை தந்துள்ள அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த காட்சியில் நடிக்கும் போது கண் கலங்கி அழுதேன் – ராஷ்மிகா மந்தனா வேதனை!
தற்பொழுது, இப்படம் திரயரங்குகளில் வெற்றிகரமாகா ஓடிய நிலையில், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகிறது. சென்சார் போர்டில் நீக்கப்பட்ட 8 நிமிட காட்சிகளும், OTT-இல் வெளியாகும் பதிப்பில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…