Categories: சினிமா

ரூ.1000 கோடியை கைப்பற்றுமா? விமர்சனங்களை மீறி வசூலை குவிக்கும் ‘அனிமல்’ திரைப்படம்.!

Published by
கெளதம்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.660 கோடி வசூல் செய்துள்ளது.

படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. 8 நாட்களில் ரூ.600 கோடியை கடந்து தற்போது ரூ.1000 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

10 நாளில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.400 கோடியைத் தாண்டியது. மேலும் உலகம் முழுவதும் ரூ.650 கோடியை கடந்தது. விடுமுறை நாட்கள் இல்லாமலும், வேலை நாட்களில் இப்படி ஒரு அபார சாதனை நிகழ்த்தி பாலிவுட் சினிமாவை அலற வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ரூ.600 கோடி வசூல் செய்து ‘அனிமல்’ திரைப்படம் சாதனை.!

அநேகமாக, ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘டுங்கி’ திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வரை டிக்கெட் கவுன்டர்களில் ‘அனிமல்’ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும்  என்பது போல் தெரிகிறது. ரூ.1000 கோடியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் 1000 கோடியை தொடும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஒரே வாரத்தில் ஹிந்தி சினிமாவை அலற வைத்த ரன்பிர் கபூர்.! உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?

அனிமல்

இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கிய இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், முராத் கெடானி மற்றும் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

Recent Posts

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

31 minutes ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

2 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

2 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

3 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

4 hours ago