இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘அனிமல்’ படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது.
படத்தின் கதைக்களம் என்பது தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் மகனுக்கும். அவன் பாசம் வைக்கும் தந்தைக்கும் இடையிலான கதை தான். இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ஷாருக்கான் மற்றும் சல்மான் கானின் படத்தின் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வசூலில் மிரட்டல் காட்டி வரும் அனிமல் திரைப்படத்தால்அனைவரது பார்வையும் ரன்பீர் கபூர் மீதாக உள்ளது.
ரூ.500 கோடியை நெருங்கிய ‘அனிமல்’ திரைப்படம்.! பாலிவுட்டை கலக்கும் ரன்பீர் கபூர்.!
அதன்படி, ஷாருக்கானின் ஜவான் படத்திற்குப் பிறகு பாலிவுட் சினிமா வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய முதல் நாள் வசூல் சாதனையை ‘அனிமல்’ திரைப்படம் வார இறுதியில் இந்தியாவில் ரூ.201 கோடி வசூலித்தது. இந்நிலையில், உலகளவில் எவ்வளவு வசூலித்திருக்கிறது எனபது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அனிமல் திரைப்படம் முதல் நாளில் ரூ.116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இரண்டாம் நாளில் ரூ.120 கோடி எனவும், மூன்றாம் நாளில் ரூ.120 கோடி எனவும், நான்காம் நாளில் ரூ.69 கோடி என ஐந்தாம் நாளான நேற்று ரூ.56 என்று மொத்தம் 481 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
ஒற்றை ஆளாய் தோளில் சுமந்து ‘ஹிட்’ வரிசையில் சேர்த்த ரன்பீர் கபூர்.! Animal பார்க் ஆன் தி வே…
திங்கட்கிழமை முதல் வேலைநாட்கள் என்பதால், வசூலில் சற்று சரிவை கண்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், சென்னையில் வெள்ளம் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்னர். இதனால், வசூல் சற்று பாதிப்படைந்துள்ளது. இருந்தாலும், இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீரானதும், வார இறுதி நாட்களான விடுமுறை முன்னிட்டு வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும், இன்றைய வசூலை வைத்து கணித்தால் இப்படம் ரூ.500 கோடியை கடந்து விடும் என்பதில் மாற்றமில்லை.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…