Categories: சினிமா

ரூ.500 கோடியை நெருங்கிய ‘அனிமல்’ திரைப்படம்.! பாலிவுட்டை கலக்கும் ரன்பீர் கபூர்.!

Published by
கெளதம்

இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார் மற்றும் ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘அனிமல்’ படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு, அமித் ராய் ஒளிப்பதிவும், சுந்தீப் ரெட்டி வங்கா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ஷாருக்கான் மற்றும் சல்மான் கானின் படத்தின் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வசூலில் மிரட்டல் காட்டி வரும் அனிமல் திரைப்படத்தால்அனைவரது பார்வையும் ரன்பீர் கபூர் மீதாக உள்ளது. சொல்ல போனால் பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு அனிமல் திரைப்படம் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

அடுத்த 1000 கோடி லோடிங்…வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ ட்ரெய்லர்!

அனிமல் பாக்ஸ் ஆபிஸ்

படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் முதல் நாளில்  படம் உலகம் முழுவதும் ரூ.116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இரண்டாம் நாளில் ரூ.110 கோடி வசூல் செய்தது. மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.100 கோடி வசூல் செய்து அதன் நான்காம் நாளான நேற்று திங்கட்கிழமை ரூ.69 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படம் 4 நாளில் உலக முழுவதும் ரூ.425 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட படம் 500 கோடியை நெருங்கியுள்ளது என்றே சொல்லலாம். வார தொடக்க நாளான நேற்று வேலை நாட்கள் என்பதால் வசூலில் சற்று சரிவை கண்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அனிமல் திரைப்படம் ரூ.500 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

3 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

4 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

5 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

6 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

7 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

8 hours ago