ரூ.500 கோடியை நெருங்கிய ‘அனிமல்’ திரைப்படம்.! பாலிவுட்டை கலக்கும் ரன்பீர் கபூர்.!

இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார் மற்றும் ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘அனிமல்’ படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு, அமித் ராய் ஒளிப்பதிவும், சுந்தீப் ரெட்டி வங்கா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ஷாருக்கான் மற்றும் சல்மான் கானின் படத்தின் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து வசூலில் மிரட்டல் காட்டி வரும் அனிமல் திரைப்படத்தால்அனைவரது பார்வையும் ரன்பீர் கபூர் மீதாக உள்ளது. சொல்ல போனால் பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு அனிமல் திரைப்படம் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
அடுத்த 1000 கோடி லோடிங்…வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ ட்ரெய்லர்!
அனிமல் பாக்ஸ் ஆபிஸ்
படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் முதல் நாளில் படம் உலகம் முழுவதும் ரூ.116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இரண்டாம் நாளில் ரூ.110 கோடி வசூல் செய்தது. மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.100 கோடி வசூல் செய்து அதன் நான்காம் நாளான நேற்று திங்கட்கிழமை ரூ.69 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
View this post on Instagram
இந்நிலையில், இந்த திரைப்படம் 4 நாளில் உலக முழுவதும் ரூ.425 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட படம் 500 கோடியை நெருங்கியுள்ளது என்றே சொல்லலாம். வார தொடக்க நாளான நேற்று வேலை நாட்கள் என்பதால் வசூலில் சற்று சரிவை கண்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் அனிமல் திரைப்படம் ரூ.500 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025