திகில் பேயாக ஆண்ட்ரியா.! பயமுறுத்தும் “பிசாசு 2” டீசர்.!
கடந்த 2011-ம் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்டு வெளியான பிசாசு. திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இந்த நிலையில், பிசாசு 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் ஆண்ட்ரியா பேயாக மிரட்டியுள்ளார். விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் வருகிறார். திகில் கதையுடன் கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களை பயமுறுத்தியது என்றே கூறவேண்டும். டீசரை பார்த்தவுடன் மக்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.