jagan mohan reddy [file image]
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க இயக்குனர் மஹி வி ராகவ் திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது படத்தை இயக்க துவங்கும் வேளையில் இறங்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘யாத்ரா’ திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த ‘யாத்ரா’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் ராஜசேகர ரெட்டி ஆகா மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. பெரிய அளவில் பேசவும் பட்டது என்றே கூறலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் அவர் அடுத்ததாக ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குகிறார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் எடுக்கப்போவதாக முன்பே தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியாக தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். அவருடன் ‘யாத்ரா’ படத்தில் ராஜசேகர ரெட்டி ஆகா நடித்த மம்முட்டி இந்த படத்திலும் நடிக்கிறார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘யாத்ரா’ திரைப்படத்தில் இருந்து தொடர்ச்சியாக இருப்பதன் காரணமாக இந்த படத்திற்கு யாத்ரா 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 9- ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகர் ஜீவா நடித்த படங்கள் எல்லாம் சமீப காலமாக சரியான விமர்சனத்தை பெறாத நிலையில். அவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளதால் இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ஜீவா மேதவி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…