அன்பு தொல்லை தாங்க முடியலப்பா….! திருமண வரவேற்புக்கு சென்ற தளபதி காயத்துடன் திரும்பினார்….!!!!
விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், கூட்ட நெரிசல்களைத் தாண்டி மண்டபத்துக்கு வந்தார். இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி, பரிசு வழங்கினார். அப்போதும் பலர் நெறுக்கியடித்ததால், விஜய்யும், அவரது மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர். பவுன்சர்ஸ் எனப்படும் பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
காலில் லேசான காயமடைந்த விஜய், மனைவி சங்கீதாவின் தொழில் கைபோட்டு, பெரும் சிரமத்துக்கு இடையே மண்டபத்தில் இருந்து வெளியேறினார். மணடபத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி, அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.