நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் “லைகர்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், விஜய் தேவரகொண்டாவும், அனன்யா பாண்டேவும் இணைந்து மும்பையில் உள்ள குடிசை பகுதிக்கு சென்றுள்ளார்கள்.
ஏனென்றால், படத்தின் கதை “லைகர்” படத்தின் கதை படி விஜய் தேவரகொண்டா குடிசை பகுதியில் வாழும் குத்துச்சண்டையில் இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பது தான். இதனால் இருவரும் மும்பையில் உள்ள குடிசை பகுதிக்கு சென்று அங்கு இருக்கும் மக்களோடு விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே சிறிய நடனம் ஆடியுள்ளனர்.
பிறகு, மும்பையில் உள்ள ஒரு லோக்கல் ரயிலில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே இருவரும் ஒன்றாக பயணித்து படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டனர். அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…