arr concert [File Image]
இசையமைப்பார் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் பிரமாண்ட இசைகச்சேரியை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியை காண பல ரசிகர்கள், ரசிகைகள் வருகை தந்திருந்தார்கள். ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த இசைகச்சேரி நடந்த நிலையில், மழை காரணமாக செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என ஏ.ஆர்,ரஹ்மான் அறிவித்து இருந்தார்.
அதன்படி, நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இசைக்கச்சேரி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்காமல் சர்ச்சையாகவும் வருத்தத்தமாகவும் முடிந்தது. ஏனென்றால், இசை கச்சேரிக்கு வருபவர்கள் தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்ய சரியான வசதி இல்லை.எனவே, இதன் காரணமாகவே ஆசையாக இசை கச்சேரி பார்க்கவேண்டும் என வருகை தந்தவர்கள் பல மணி நேரம் காத்திருந்ததற்கு பிறகு தான் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர்.
அது மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியை காண வருவதற்காக வைரம்,தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என ரூ.2,000 முதல் 20,000 வரை செலவு செய்து டிக்கெட் வாங்கி கொண்டு வருகை தந்தார்கள். இருப்பினும், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் கூட இசையை கச்சேரியை பார்க்க நூற்றுக்கணக்கானவர்களுக்கு இடம் கூட கிடைக்கவில்லையாம்.மொத்தமாக 20,000 இருக்கைகள் கிட்ட இருந்த அந்த இடத்தில் அதற்கு மேல் பலரும் கூட்டமாக கூடிய காரணத்தால் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறினார்கள்.
இதனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் கச்சேரி முடிவதற்கு முன்பே பாதியிலேயே வீட்டிற்கு சென்றனர். இசை கச்சேரிக்கு வந்த பலரும் மேலும் சில நெட்டிசன்களும் இதுகுறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியீட்டு விமர்சனம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டது.
இதனையடுத்து, இசையமைப்பாளர் ஏ.ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் இசைக்கச்சேரி பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றவர்கள், arr4chennai@btos.in இ-மெயில் முகவரிக்கு, டிக்கெட் நகலுடன் உங்கள் குறைகளை அனுப்பவும்” எனவும் அறிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…