நடிகை லைலா 16- ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான “சர்தார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே கூறலாம். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமார்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் லைலா நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்காக சினிமாவில் 16 வருடம் விலகி இருந்ததற்கான காரணத்தையும், தனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய லைலா “16 வருடங்களாக நான் நடிக்காமல் இருந்தது உண்மையாகவே பெரிய இடைவெளிதான்.
படங்களில் நடித்து கொண்டு பிசியான காலத்தில் திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனேன். பிறகு கணவர், குடும்பம், குழந்தைகளை கவனிக்க நேரம் தேவைப்பட்டது. என்னுடைய இரண்டு பசங்களும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். இப்போது நடிக்கலாம் என ஆசை வந்தது.
இதையும் படியுங்களேன்- க்யூட்டா இருந்தாலும் கொஞ்சம் ‘ஹாட்டு’ தான் ….புடவையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி,!
எனக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தது. எனக்கு தேடி வந்த கதைகள், கதாபாத்திரங்கள் எதுவுமே எனக்கு செட் ஆகவில்லை. சரியான கதைகள் அமையவில்லை. பல படத்தில் அம்மா கதாபாத்திரம், சில படத்தில் அக்கா கதாபாத்திரம், அண்ணி கதாபாத்திரம் இப்படி பட்ட கதாபாத்திரங்களில் தான் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், எனக்கு அப்படி படங்களில் நடிக்க விரும்பம் இல்லை.
நல்ல கதை இருக்கவேண்டும், அந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என காத்திருந்தேன். “சர்தார்” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதில் நடித்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் லைலா.இதனை பார்த்த அவரது ரசிகர்கள் சற்று ஷாக்காகி நல்ல வேலை நீங்கள் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என கூறி வருகிறார்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…