நடிகர் விஜய் தனது 69-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவார். எனவே, விஜயின் கடைசி படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதில் சமீபத்தில் மிகவும் வைரலான ஒரு தகவல் என்னவென்றால், விஜயின் 69-வது படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்குகிறார் என்பது தான்.
ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய்யை சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் கதை ஒன்றை கூறியிருந்தார். ஆனால், இருவரும் வேறு வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் காரணத்தால் இருவரும் இணையும் படம் தள்ளிச்சென்று கொண்டே இருக்கிறது.
படத்துக்கு 4 கோடி சம்பளமா? இனிமேல் உயர்த்தி கேட்க வேண்டும் – ராஷ்மிகா.!
இந்நிலையில், தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் காம்போவில் வெற்றி மாறன் -விஜய் காம்போ இருக்கிறது. இதனையடுத்து, சமீப நாட்களாக விஜயின் 69-வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், விஜய் படம் குறித்து வெற்றிமாறன் பேசிய பழைய வீடியோவும் வைரலாகி வருகிறது.
அப்போது ஒரு வீடியோவில் ” விஜய் சாரிடம் ஒரு கதையை கூறினேன் அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. கதையை கேட்டுவிட்டு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறியிருந்தார். இதுவரை என்னுடைய படத்தின் தேதி தான் அவருடன் படம் செய்ய முடியாமல் இருக்கிறது. அவர் நீ உன்னுடைய படங்களை முடித்துவிட்டு வா செய்யலாம் என்று தான் கூறியிருக்கிறார்.
விஜய் சாருடன் ஒரு படத்தில் பணியாற்ற போகிறேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என வெற்றிமாறன் கூறியிருந்தார். வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…