பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார். அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடிப்பதன் மூலம் அறிமுகமான அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் அதிதி ஷங்கருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்த நிலையில் அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே சமயம் சுதா கொங்கரா இயகத்தில் சூர்யா நடித்துவரும் சூர்யா43 திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்க அணிந்து கொண்டு மருத்துவர் போல போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நாளை OTT-இல் வெளியாகிறது ‘அனிமல்’ திரைப்படம்.!
அந்த புகைப்படங்களை பார்த்த பலருமே அதிதி ஷங்கர் விரைவில் திருமணம் முடித்துக் கொண்டு சினிமா விட்டு விலகப் போகிறார் எனவும், சினிமா விட்டு விலகி மருத்துவராக பணியாற்ற போகிறார் என்பது போல தகவலை கிளப்பி விட்டனர்.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவல் என்னவென்றால் நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். அந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அதிதி ஷங்கர் திருமண வதந்திக்கும் சினிமாவை விட்டு அவர் விலகுவதாக பரவும் தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…