maniratnam thug life [File Image]
Thug Life இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, நாசர், கௌதம் கார்த்திக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று காதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்த நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு பிரபலம் படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் இருந்து ஜெயம் ரவி தான் விலகியுள்ளாராம்.
துல்கர் சல்மானை போலவே ஜெயம் ரவியும் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் காரணத்தால் தக் லைஃப் படத்திற்காக அவரால் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லையாம். எனவே, படத்தில் இருந்து ஜெயம் ரவியும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு பிரபலங்கள் படத்தில் இருந்து விலகி உள்ள காரணத்தால் மணிரத்னம் சற்று வேதனையில் இருக்கிறாராம்.
இரண்டு பேரையையும் வைத்து தான் மணிரத்னம் இந்த படத்தின் கதையை எழுதி இருப்பார். இப்போது திடீரென இருவரும் படத்தில் இருந்து விலகி உள்ளது சற்று அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். இருப்பினும் இவர்கள் இருவரும் படத்தில் இருந்து விலகியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவே இல்லை. மேலும், துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…