தக் லைஃப் படத்தின் அடுத்த விக்கெட் காலி! கடும் வேதனையில் இயக்குனர் மணிரத்னம்!

maniratnam thug life

Thug Life இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, நாசர், கௌதம் கார்த்திக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று காதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்த நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு பிரபலம் படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் இருந்து ஜெயம் ரவி தான் விலகியுள்ளாராம்.

துல்கர் சல்மானை போலவே ஜெயம் ரவியும் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் காரணத்தால் தக் லைஃப் படத்திற்காக அவரால் கால்ஷீட் கொடுக்கமுடியவில்லையாம். எனவே, படத்தில் இருந்து ஜெயம் ரவியும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு பிரபலங்கள் படத்தில் இருந்து விலகி உள்ள காரணத்தால் மணிரத்னம் சற்று வேதனையில் இருக்கிறாராம்.

இரண்டு பேரையையும் வைத்து தான்  மணிரத்னம் இந்த படத்தின் கதையை எழுதி இருப்பார். இப்போது திடீரென இருவரும் படத்தில் இருந்து விலகி உள்ளது சற்று அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். இருப்பினும் இவர்கள் இருவரும் படத்தில் இருந்து விலகியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவே இல்லை. மேலும், துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்