பிரமாண்டமான நட்சத்திர விடுதியில் தான் திருமணம் என அறிவித்த எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “மதராசபட்டினம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள்.
சமீபத்தில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே தான் கர்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்நிலையில் 2020 ம் ஆண்டு கிரேக்கில் எமி ஜாக்சன் திருமணம் செய்ய உள்ளார்.எமி ஜாக்சன் திருமணம் கிரேக்கில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான மிக்கனாஸ் (Mykonos) ஐலேண்டில் தான் திருமணம் நடைபெற உள்ளது.