விஜய்யின் 67 படங்களில் முதல் 3 இடங்களில் ‘லியோ’ படம் இருக்கும்! ரத்ன குமார் அதிரடி பேச்சு!
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் வசனம் எழுதியுள்ள ரத்னகுமார் இருவரும் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், பேட்டி ஒன்றில் லியோ திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பேட்டியில் பேசிய அவர் ” லியோ திரைப்படம் முழுவதுமாக பார்த்தோம். படத்தை அனிருத்தின் பின்னணி இசை இல்லாமல் பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தது.
அவருடைய பின்னணி இசையுடன் படத்தை பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்கள் மிரண்டு போய்விடுவார்கள். இதுவரை விஜயின் படங்களில் டைட்டில் கார்ட் நிறைய வந்திருக்கிறது. ஆனால், லியோ படத்தில் வரும் டைட்டில் கார்ட் மிகவும் வித்தியாசமானதாகவும் சஸ்பென்ஸாகவும் இருக்கும். அதனை பார்க்கும் போது பலருடைய பேவரைட்டாக மாறும்.
படத்தில் பல சஸ்பென்ஸ் காட்சிகள் இருக்கிறது கண்டிப்பாக படம் அனைவர்க்கும் பிடிக்கும் படி இருக்கும். இதுவரை விஜய் சார் நடிப்பில் 66 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. 57-வது படமாக லியோ படம் வெளியாகவிருக்கிறது. இந்த 67 படங்களில் டாப் 3 படங்களில் கண்டிப்பாக லியோ திரைப்படத்தின் பெயரும் இடம்பெறும்.
படத்தில் அர்ஜுன் மற்றும் விஜய் ஆகியோருக்கு நடக்கும் உரையாடல் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும். அந்த அளவிற்கு மக்கள் அவர்களுடைய உரையாடலை ரசிப்பார்கள். படத்தில் மன்சூர் அலிகான் கதாபாத்திரமும் ட்ரென்டிங் ஆக கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஜாலியான கதாபாத்திரமும் மக்கள் கொண்டாடுவார்கள்” எனவும் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ரத்னகுமார் கடைசியாக சந்தானத்தை வைத்து ‘குளு குளு’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் எழுதிய கதை ஒன்றை படமாக இயக்குகிறார். அந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.