Categories: சினிமா

அதுக்கு நோ சொன்னேன் கெட்ட வார்த்தையில் திட்டுனாங்க! அம்மு அபிராமி வேதனை!

Published by
பால முருகன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை தான் அம்மு அபிராமி. இவர் தனுஷிற்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதைப்போல, ராட்சசன், யானை உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.

முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில்,  சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அம்மு அபிராமி தன்னுடைய வாழ்வில் கடந்து வந்தபோது நடந்த சம்பவங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு விரைவில் டும்..டும்..டும்?

இது குறித்து பேட்டியில் பேசிய நடிகை அம்மு அபிராமி ” நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருவருக்கு என்னை ரொம்ப பிடித்திருந்தது. ஆனால், அவர் மீது எனக்கு பெரிய அளவில் விருப்பம் வரவில்லை. ஒரு முறை அவர் என்னிடம் வந்து காதலை சொன்னார். நான் அதற்கு எனக்கு இதெல்லாம் செட் ஆகாது என்று சொன்னேன்.

அதுவும் நான் கோபமாக கூட சொல்லவில்லை சாதாரணமாக தான் சொன்னேன். நான் அப்படி சொன்ன அடுத்த நாளில் இருந்து என்னை தவறான பெயரை சொல்லிக்கொண்டே அழைத்தார். காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் என்னை கண்டபடி கெட்டவார்த்தைகளை போட்டு என்னை தீட்டினார். பெண்களை திட்டி தான் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை.

எனக்கு ஒரு விஷயத்தில் விருப்பம் இல்லை என்று சொல்கிறேன். அப்படி சொன்ன காரணத்தால் என்னை தவறாக நினைத்து கொள்கிறார்கள். நான் அந்த மாதிரி இல்லை என்றாலும் என்னை அந்த வார்த்தையால் என்னை திட்டியது ரொம்பவே ஒரு மாதிரி இருந்தது” எனவும் நடிகை அம்மு அபிராமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

2 hours ago
GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

3 hours ago
RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

4 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

4 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

8 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

8 hours ago