ஷாருக்கான் மகளுடன் அமிதாப்பச்சன் பேரன் டேட்டிங்..? பரபரப்பை கிளப்பிய புதிய தகவல்.!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் மகளும் நடிகையுமான சுஹானா கான் தற்போது “தி ஆர்ச்சீஸ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா, வேதாங் ரெய்னா, யுவராஜ் மெண்டா மற்றும் பலர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் சுஹானா கான் மற்றும் அகஸ்தியா நந்தா இருவரும் பழக்கம் ஏற்பட்டதாவும், இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்களேன்- வடிவாசலை முடிக்காத வெற்றிமாறன்… சுதா கொங்கரா பக்கம் தஞ்சம் அடைந்த சூர்யா.!?
இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வரும் தகவல் அகஸ்தியாவின் தயார் ஸ்வேதா பச்சனுக்கு தெரியும் எனவும், அவரும் இந்த “உறவுக்கு ஒப்புதல் அளித்ததாகவும்” தகவல்கள் வெளியாகியுள்ளது. அகஸ்தியாவின் அம்மா ஸ்வேதா பச்சன் சுஹானாவை “நேசிப்பதாகவும்” “உறவுக்கு ஒப்புதல் அளித்ததாகவும்” கூறுகிறது.
அது மட்டுமில்லாமல், அகஸ்தியா சுஹானா கானை தனது ‘பார்ட்னர்’ என்று அறிமுகப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வது உண்மைதானா அல்லது வெறும் வதந்தி தகவலா என்பதை அவர்களே அறிவித்தால் மட்டுமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.