ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் செல்லவேண்டும் என்பதற்காக நபர் ஒருவரின் பைக்கில் சவாரி செய்தார். அதைபோலவே, மேலும் அனுஷ்கா ஷர்மா தனது காரைத் விட்டு சாலைத் தடையைத் தவிர்க்க பைக் சவாரியைத் தேர்ந்தெடுத்தார்.
இவர்கள் இருவரும் பைக்கில் சென்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, இரண்டு நிகழ்வுகளிலும், நடிகர்களோ அல்லது ஓட்டுநர்களோ ஹெல்மெட் அணியவில்லை என்பதை நெட்டிசன்கள் கவனித்தனர். இந்நிலையில், இரண்டு நட்சத்திரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க மும்பை காவல்துறையை அணுகிய ட்விட்டர் பயனர்களுக்கு மும்பை காவல்துறையினர் பதில் அளித்துள்ளனர். ‘உண்மையில் அவர்கள் செயல்களைக் கவனித்துள்ளோம் என்று ட்வீட் செய்து, “இதை நாங்கள் போக்குவரத்துக் கிளையுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். ” என பதிவிட்டுள்ளார்கள்.
அனுஷ்கா ஷர்மா ஒரு பைக் சவாரியைத் தேர்வுசெய்த வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவியது, அதை பலர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர். வீடியோவில், ஜூஹூவில் மரம் விழுந்ததால் அனுஷ்கா தனது ஊழியரின் ஸ்கூட்டர் ஒன்றில் ஏறிச் செல்வதைக் காணலாம்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…