ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!
ஏ.ஆர்.ரஹ்மானும், மனைவி சாய்ரா பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, வேறொருவருடன் தொடர்பு படுத்தி பரவிய வதந்திகளுக்கு ரஹ்மான் மகன் மௌனம் கலைத்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர் 19ம் தேதி அறிவித்துள்ளனர். தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சல் தான் பிரிந்ததற்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, ரஹ்மான் விவாகரத்து செய்தியை அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் அவருடைய இசை குழுவை சேர்ந்த மோகினி தே என்பவரும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இதன் காரணமாக, இவருடன் தொடர்பு படுத்தி சில வதந்திகள் பரவி வந்தது.
இந்நிலையில்,வதந்திகள் பரவுவதால் மனமுடைகிறது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் கூறியுள்ளார். இது குறித்து அமீன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “என் தந்தை ஒரு லெஜெண்ட். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட் என்றார்.
மேலும், ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதை பார்க்கும்போது மனமுடைகிறது. ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும், அவரின் கண்ணியத்தை மதித்து அதனை காக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.