ameer paruthiveeran [File Image]
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை பற்றி பேசியிருந்த காரணத்தால் பருத்திவீரன் படத்தின் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து சசிகுமார், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, சினேகன், ஆகியோர் ஞானவேல் ராஜா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
ஞானவேல் ராஜாவும் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு தெரிவிக்காமல் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதனால் வருத்தம் தெரிவிக்கிறது எல்லாம் பெரிய விஷயம் இல்லை சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறிவருகிறார்கள். இந்த விவகாரம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் படம் பற்றி யாருக்கும் தெரியாத தகவலும் பரவி கொண்டு வருகிறது.
குறிப்பாக பருத்திவீரன் படத்திற்காக சில பிரபலங்கள் சம்பளம் வாங்காத தகவல், அதைப்போல, படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கி அந்த சமயமே பாராட்டியுள்ள பிரபலங்கள் பற்றிய தகவலும் பரவி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கண்கலங்க வைக்கும் படங்களை இயக்கி கொடுத்து வரும் இயக்குனர் பாலாவே பருத்திவீரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுதாராம். இந்த தகவலை இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பிகில் படத்தில் நடித்ததால் ரஜினி பட வாய்ப்பு மிஸ் ஆயிட்டு! நடிகை இந்துஜா வேதனை!
இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் “பாலா என்னுடைய மௌனம் பேசியதே படத்தை பார்த்திருக்கிறார். நானே படத்தை முடித்துவிட்ட அவரை அழைத்து படத்தை போட்டு காட்டினேன் . அவர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக கூறினார். அதைப்போல, பருத்திவீரன் படத்தையும் அவர் பார்த்தார்.
படத்தை பார்த்துவிட்டு எனக்கு முதலில் கால் செய்து எங்கு இருக்கிறாய்? உன்னை நான் பார்க்கவேண்டும் என்று சொன்னார். உடனடியாக நான் நீ இங்கு வரவேண்டாம் நானே அங்கு வருகிறேன் என்று கூறிவிட்டு நானே அவரை பார்க்க சென்றேன். இருவரும் சந்தித்து படம் பற்றி பல விஷயங்களை பேசினோம். அவர் ஒரு இரண்டு இடத்தை குறிப்பிட்டு அதனை பார்க்கும்போது கண்கலங்கி விட்டேன் என்று கூறினார். அந்த சந்திப்பிறகு நானும் பாலாவும் சந்திக்கவே இல்லை” எனவும் அமீர் தெரிவித்துள்ளார். மேலும், அமீர் பாலாவிடம் உதவி இயக்குனராகவும் நந்தா படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…