சினிமா

பாடகி ஸ்ரேயா கோஷலை அழுக வைத்த இயக்குனர் அமீர்! காரணம் என்ன தெரியுமா?

Published by
பால முருகன்

பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் ஆகியோருக்கும் இடையே நடந்த பிரச்சனை 16 வருடங்களுக்கு பிறகு இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து ஞானவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து  சமுத்திரக்கனி, சசிகுமார், சினேகன், பொன்வண்ணன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாக இறங்கினர்.

இந்த விவகாரம் பற்றிய சர்ச்சை ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது நடந்த சில சுவாரசியமான விஷயங்களும் வைரலாகி வருகிறது. குறிப்பாக பருத்திவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் வருகை தந்து ரிலீஸ் செய்து கொடுத்த புகைப்படங்கள், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் வைரலானது.

அந்த வகையில், படத்தில் இடம்பெற்ற அய்யயோ பாடலை பாடகி ஸ்ரேயா கோஷல் பாடும் போது அமீர் அவரை அழ வைத்த சம்பவம் பற்றி அமீரே வெளிப்படையாக பேசிய வீடியோ வைராகி வருகிறது. முதலில் பாடகி ஸ்ரேயா கோஷல் அய்யயோ பாடலை  படுவதற்கு வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துவிட்டாராம். வந்த பிறகு பாடலை பாடி கொடுத்தாராம்.

இன்னும் அட்ஜஸ்ட்மென்ட் தொடருதா? நடிகை யாஷிகா ஆனந்த் சொன்ன பதில்!

அந்த பாடலை கேட்டவுடன் சின்ன சின்ன கரெக்சன் இருக்கிறது அதனை மாற்றி பாடி கொடுக்கவேண்டும் என்று அமீர் தன்னுடைய உதவி இயக்குனர் ஒருவரிடம் கூறி அதனை ஆங்கிலத்தில் ஸ்ரேயா கோஷலிடம் கூறுங்கள் என்று சொன்னாராம். பிறகு அமீர் சொன்னதை போல படாமல் ஸ்ரேயா கோஷல் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப பாடலை பாடி கொண்டு இருந்தாராம்.

ஆனால், அமீருக்கு சரியாகவே வரவில்லையாம். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் நீங்கள் பாடுவது வேண்டாம் நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ளுங்கள் என கூறினாராம். ஸ்டுடியோவில் இருந்த ஸ்ரேயா கோஷல் தாயார் ஒரு பாடலை இவ்வளவு நேரமா எடுப்பீங்க? என்னுடைய பொண்ணு ரொம்பவே சோர்வாகிவிட்டார் என்று கூறினாராம்.

பிறகு ஸ்ரேயா கோஷல் காலையில் இருந்து நான் மூன்று பாடலை முடித்துவிட்டு இங்கு வந்து இருக்கிறேன் என்று கூறினாராம். அதற்கு அமீர் அது என்னுடைய பிரச்சனை இல்லை என ப்ளீச் என்று கூறிவிட்டாராம். பின் இந்த பாடலில் உங்களுடைய மாடல் வாய்ஸ் வர கூடாது இந்த பாடலை அந்த கதாபாத்திரத்தில் இருக்கும் முத்தழகு பாடினால் எப்படி இருக்குமோ அது தான் எனக்கு வேணும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்ரேயா கோஷல் கண்கலங்கி அழுதும் விட்டாராம். அழுத பிறகு அங்கிருந்த அனைவருமே பயந்துவிட்டார்களாம். பிறகு அமீர் ” அவுங்க இங்கு இருந்து ஊருக்கு செல்லட்டும் அதற்கு பணம் நான் கொடுக்கிறேன் நான் வேறு பாடகியை வைத்து இந்த பாடலை எடுத்து கொள்கிறேன்” என்று கூறினாராம். உடனடியாக இதனால் கடுப்பான ஸ்ரேயா கோஷல் 1 நாள் எனக்கு நேரம் கொடுங்கள் நான் பாடி காட்டுகிறேன் என்று கூறிவிட்டு அடுத்த நாள் வந்து அசத்தலாக பாடி கொடுத்தாராம். அவர் பாடிய அந்த இறுதி வெர்ஷன் தான் படத்தில் வருவது எனவும் அமீர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

5 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…

5 hours ago

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

6 hours ago

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

7 hours ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

7 hours ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

7 hours ago