என் மகனை வச்சு என்ன பண்ற? அமீரிடம் பதறி போன சிவகுமார்.!

paruthiveeran ameer

பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசியதற்கு சசிகுமார், சினேகன், பொன்வண்ணன், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பிறகு ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கையையும் வெளியீட்டு இருந்தார்.

அந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், பருத்திவீரன் பட படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் இயக்sivakumarகுனர் அமீர் பேசி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்த அமீர் பருத்திவீரன் படப்பிடிப்பு தளத்திற்கு சிவகுமார் வந்ததை பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் “பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது ஒரே ஒரு நாள் மட்டும் தான் வந்து பார்த்தார். அவர் வந்த அன்று தான் கார்த்தியை மரத்தில் படுக்கை வைத்து ஒரு காட்சி ஒன்றை எடுத்துக்கொண்டு இருந்தேன். சரியாக அந்த சமயம் சிவகுமார் சார் படப்பிடிப்புக்கு வந்தார். வந்து பார்த்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.

ஏனென்றால், கார்த்தி மரத்தில் இருந்ததை பார்த்துவிட்டு என்னிடம் சிவகுமார் சார் என்னடா என் மகனை பண்ணிக்கிட்டு இருக்க? என்று கேட்டார்.  அதற்கு நான் இல்ல சார் அது படத்தில் வரும் ஒரு காட்சி அதனால் தான் அந்த காட்சியை எடுத்துக்கொண்டு இருந்தேன் என்று கூறினேன். அப்போது காட்சியை முடித்துவிட்டு ஒதுங்க கூட இடமில்லை.

படப்பிடிப்பில் ஒரே ஒரு கூடாரம் போன்று போட்டு கொண்டு வெயிலை தாங்கமுடியவில்லை என்றால் அதற்குள் போய் நின்றுக்கொள்வோம். ஒரே ஒரு நாள் மட்டும் தான் சிவகுமார் சார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அதன் பிறகு ஒரு நாள் கூட வரவே இல்லை” என அமீர் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசிய அமீர் ” சிவகுமாரை போல சூர்யாவும் ஒரே ஒரு நாள் தான் படப்பிடிப்பு வந்தார்.

சரியாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது மதுரையில் எடுக்கப்பட்டு வந்தது. அந்த சமயம் தான் சூர்யா வந்து படத்தின் படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்தார். அதைப்போல படம் எடுக்கப்பட்ட வரையில் முதலில் போட்டு காமிக்கப்பட்டது சூர்யாவுக்கு தான். அவரும் படத்தை பார்த்துவிட்டு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார்”  எனவும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்