ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!

ameer gnanavel raja issue

இயக்குனர் அமீர் நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி கார்த்தியை சினிமாவில் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தும் இருந்தது. இந்த படத்தின் சமயத்திலேயே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைப்போல தயாரிப்பாளர்  ஞானவேல் அமீர் ஆகியோருக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல்  ” மௌனம் பேசியதே படத்தின் போதே  சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது எனவும், அதற்கு காரணம் அவர் சூர்யாவிடம் சரியாக பேசாமல் அவரை சரியாக நடத்திக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!

அது மட்டுமின்றி,பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” எனவும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து இதுவரை பேசாமல் இருந்த அமீர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மீது சொன்ன குற்றச்சாட்டுகளுக்கும், பரப்பிய அவதூறுகளுக்கும், என்னைப் பற்றிக் கூறிய வரம்பு மீறிய வார்த்தைகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.

“பருத்திவீரன்” படம் தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன்.இப்பிரச்னை “YOUTUBE” உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.பருத்திவீரன் தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை.

அனைத்தும், பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே. “பருத்திவீரன்” திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை.

படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர். அதன் பின்னரே, நான் எனது “TEAMWORK PRODUCTION HOUSE” நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன்.

நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது, ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்ற காரணத்தினாலும், ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல.!
உண்மை இப்படியிருக்க, ஞானவேல் என்னைப் பற்றி கூறிய விசயங்களால் நான் அடைந்த மன உளைச்சலை விட, என் குடும்பத்தாரே அவரால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற போதிலும், நானும், என் குடும்பத்தாரும் இதையெல்லாம் கடந்து வந்து விடுவோம், துளியும் அவரது சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம் என்பதைத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

DirectorAmeer
DirectorAmeer [file image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்