சூர்யா இருக்காரு நான் நடிக்க மாட்டேன்! மௌனம் பேசியதே படத்தில் நடிக்க மறுத்த ஹீரோ?
இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, நந்தா துரைராஜ் ஆகியோர் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மௌனம் பேசியதே’. இந்த திரைப்படத்தில் திரிஷா, நேஹா பென்ட்சே, அமீர், விதார்த், அஞ்சு மகேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த காதல் காட்சிகள் எல்லாம் அந்த சமயம் இளைஞர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஆனால், முதலில் இந்த படத்தின் கதையை இயக்குனர் அமீர் வேறுமாதிரி வைத்திருந்தாராம்.
நீ ஜெயிச்சிட்ட மாறா! முதன் முறையாக கார்த்தியை கட்டிப்பிடித்த சூர்யா…எதற்காக தெரியுமா?
கிட்டத்தட்ட இரண்டு ஹீரோக்கள் வைத்து படம் நகர்வது போல வைத்திருந்தாராம். ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவும், மற்றோரு கதாபாத்திரத்தில் அருண் விஜய்யையும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம். முதலில் படத்தின் கதையை இயக்குனர் அமீர் அருண் விஜய்யிடம் கூறினாராம். கதையை கேட்டவுடன் அருண் விஜய் நடிக்கவே யோசித்தாராம்.
அதற்கு காரணமே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு முக்கியத்துவம் இருந்தது தான். படத்தின் கதையை கேட்டவுடன் நான் நடிக்கவில்லை கதையை கேட்கும்போதே படத்தில் சூர்யாவுக்கு தான் முக்கியதுவம் இருப்பது போல் தெரிகிறது. எனவே, நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று அருண் விஜய் இயக்குனர் அமீரிடம் கூறிவிட்டாராம்.
இந்த தகவலை இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். மேலும், மௌனம் பேசியதே படத்தில் அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு இன்னும் அந்த சமயம் பட வாய்ப்புகள் குவிந்து இருக்கும். அருண் விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்தபிறகு படத்தின் கதையை அமீர் நந்தா துரைராஜிடம் கூறினார். அவருக்கு கதை பிடித்தவுடன் அவர் சம்மதம் தெரிவித்துவிட்டு படத்தில் நடிக்கவும் செய்தார். படமும் சூப்பர் ஹிட் ஆனது.