ஒரே மாதம் தான்…OTT-யில் வெளியாகும் கங்குவா! டிவிஸ்ட் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த அமேசான் ப்ரைம்.!
சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம், நாளை மறுநாள் (டிச.08) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘கங்குவா’ திரைப்படம் ஒரு மாதம் கூட ஆகல, அதுக்குள்ள OTT தேதி குறித்த தகவல் வெளியாகிவிட்டது. முன்னதாக, அமேசான் OTT-யில் வரும் 13 ஆம் தேதி முதல் கங்குவா படம் வெளியாக இருப்பதாக என்ற தகவல் வெளியானது.
ஆனால், தற்பொழுது ‘கங்குவா’ திரைப்படம், நாளை மறுநாள் (டிச.08) ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அமேசான் ப்ரைமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்து, சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த நவம்பர் மாதம் 14 -ஆம் தேதி வெளியான இப்படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படம் வெளியாகிருந்தது.
அந்த வகையில், ‘கங்குவா’ படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம், மோசமான விமர்சனங்களை சந்தித்தும் இவ்வளவு விலைக்கு வாங்கியிருப்பது விநோதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால், சூர்யா எதிர்ப்பாளர்கள் செய்த ட்ரோல்களால்தான் தியேட்டர்களில் படம் ஹிட் அடிக்கவில்லை, எனவே OTT-யில் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையிலேயே அமேசான் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.