தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ‘அன்பு’ எனும் பேக்கரி ஒன்றில் கேக் கண்காட்சி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக பல வித்தியாச வித்தியாசமான கேக்குகளை செய்து பேக்கரி அசத்தியுள்ளது.
அந்த வகையில், எல்லாரும் பார்த்து மெய்சிலிர்க்க வேண்டும் என்பதற்காகவே அஜித் – விஜய் இருவரும் தோல் மீது கை போட்டுகொண்டவாறு 6 அடியில் அவர்களுடைய உருவத்தை கேக் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக் 120 கிலோ எடையை கொண்டது என கூறப்படுகிறது.
அதற்கான சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த கேக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட பல வகையான கேக்குகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பலருக்கும் பிடித்த ஒன்றாக அஜித் -விஜய் உருவத்தை வைத்து செய்த அந்த 6 அடி கேக் மாறியுள்ளது.
பேக்கரி கண்காட்சிக்கு வந்த பலரும் அஜித் -விஜய் உருவ கேக்கை பார்த்துவிட்டு செல்ஃபி எடுத்து சென்றுள்ளார்கள். மேலும் கண்காட்சியில் குழந்தைகளுக்காக அவர்களுக்கு பிடித்த கார்டூன்களையும் கேக்குகளில் செய்து அசத்தியுள்ளார்.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…