இந்த தீபாவளிக்கு அமரன் VS விடாமுயற்சி.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
அமரன் : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.
முன்னதாக, வெளியீட்டு தேதியில் ஒரு புதிராக இருந்தது. இப்பொது, அந்த குழப்பத்திற்கு தயாரிப்பாளர்கள் முற்றுப்புள்ளி வைத்து, ‘அமரன்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
This Diwali???? #Amaran #AmaranDiwali#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film by @Rajkumar_KP
@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran pic.twitter.com/u6A1GI4x3e
— Raaj Kamal Films International (@RKFI) July 17, 2024
அதன்படி ‘அமரன்’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் தீபாவளி முன்னிட்டு வெளியிட இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. ஆனால், சிவகார்த்திகேயணினின் அமரன் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடக்க போகிறது என்று காத்திருந்து பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். ஆம், இந்த படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை பேசும். முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.