சென்னை : கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ‘அமரன்’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது என்ற சஸ்பென்ஸை உடைத்துள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆம், வரும் டிசம்பர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ராணுவ திரைப்படமாகும். இப்படம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.
இப்படம் ரூ.130 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.350 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ள இப்படம் ரூ.60 கோடிக்கு OTTக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகிருக்கிறது.
இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேஷ் மற்றும் அபினவ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, சிஎச் சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…