அமலாபாலிடம் சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கில் விசாரணை!
பிரபல தமிழ் நடிகை அமலாபால், மெர்சிடஸ் எஸ் ரக காரை இறக்குமதி செய்ததாகவும், அதை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் பதிவு செய்ததாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் வசித்து வரும் அமலா பால், புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி அளித்து கேரளாவில் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு.
மேலும் அமலா பால் சுமார் 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக, அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, நடிகை அமலாபாலின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று அவர் திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரின் தலைமை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.