சென்னையைச் சேர்ந்த அழகேஸ்வரன் நடிகை அமலாபாலைச் சீண்டியது குறித்து முக்கியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
சென்னை, தி.நகர் பஸ் நிலையம் எதிரில், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் நடனப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, நடனப் பயிற்சிக்காக நடிகை அமலாபால், நேற்று மாலை வந்தார். அப்போது, அங்கு வந்த சென்னை, கானாத்தூர், ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்த அழகேஸ்வரன், நடிகை அமலாபாலைச் சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே வாய்தகராறு ஏற்பட்டது. உடனடியாக, அமலாபாலுவின் உதவியாளர்கள் அங்கு ஓடிவந்து, அழகேஸ்வரனை அங்கிருந்து அகற்ற முயன்றனர். இதனால், அங்கு கைகலப்பு நடந்தாகச் சொல்லப்படுகிறது.
நடனப்பள்ளியில் பிரச்னை ஏற்பட்டதைப் பார்த்த பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாம்பலம் போலீஸார் அங்கு விரைந்தனர். நடிகை அமலாபால், அவரது உதவியாளர்கள் மற்றும் அழகேஸ்வரன் ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையிலான போலீஸார், அமலாபால், அழகேஸ்வரன் ஆகியோரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்
அப்போது அமலாபால், ‘பிப்ரவரி 3-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள ‘டான்சிங் தமிழச்சி’ என்ற பெண்களுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். இதற்காக தி.நகரில் டான்ஸ் பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன். இன்று மாலை (31.1.2018) டான்ஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது, அறிமுகம் இல்லாத நபர், ஒருவர் என்னைச் சந்தித்தார். என்னிடம் மலேசியாவுக்கு வரும் நீங்கள், இன்னொரு பார்ட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவரது பாலியல் ரீதியான அணுகுமுறை எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இதனால், அந்த நபரை எச்சரித்தேன். அதற்குள் என்னுடைய உதவியாளர்கள் அங்கு வந்துவிட்டனர்’ என்று போலீஸில் கூறியுள்ளார்.
இதையடுத்து, அழகேஸ்வரனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபரான கோடீஸ்வரர் ஒருவர் கூறியதன்பேரில்தான் அமலாபாலைச் சந்தித்துப் பேசினேன். அமலாபாலுவிடம் தவறாக நான் பேசவில்லை. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அமலாபாலுவின் உதவியாளர்கள் என்னைத் தாக்கினர். இதில் என்னுடைய செல்போன் உடைந்துவிட்டது. இதனால், என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் அமலா பால் அளித்த புகாரின் பெயரில் அவரை போலீசார் கைது செய்தனர் .
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “சென்னை கானத்தூர், ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன். இவர், கார்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நடிகை அமலாபாலுவின் உதவியாளர்கள் தன்னைத் தாக்கியதாக அழகேஸ்வரன் எங்களிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் நடனப்பள்ளியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது, அழகேஸ்வரனின் செல்போன் உடைந்ததற்கான எந்தக் காட்சியும் அங்கு இல்லை. பொது இடத்தில் நடிகை அமலாபாலுவிடம் எதற்காக அழகேஸ்வரன் அப்படிப் பேசினார் என்று விசாரித்துவருகிறோம். முதற்கட்ட விசாரணையில் மலேசியாவைச் சேர்ந்த கோடீஸ்வரான தொழிலதிபர் ஒருவருக்காகத்தான் அழகேஸ்வரன் அவ்வாறு பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபரின் பின்னணி குறித்து விசாரித்துவருகிறோம். அதோடு அழகேஸ்வரனின் நெருங்கிய நண்பர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. தேவைப்பட்டால் அழகேஸ்வரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம்.
அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், 354 ஏ (பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல்) 509 (பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தல்) பெண்கள் வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அழகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைதுசெய்துள்ளோம். அவரின் செல்போனுக்கு மலேசியாவிலிருந்து அழைத்த போன் கால்களை ஆய்வு செய்துவருகிறோம். அதில், கோடீஸ்வரர் ஒருவரும் பேசியுள்ளார். அவரை விசாரித்தால்தான் முழுவிவரம் தெரியவரும்” என்றனர்.
போலீஸிடம் புகார் கொடுத்துவிட்டு வெளியில் வந்த அமலாபால், “என்னைப்போன்று தனியாக வாழும் பெண்களில் பலர் இதுபோன்ற துயரங்களைச் சந்திப்பது வாடிக்கையாக உள்ளது. என்னிடம் தவறாக பேசிய அழகேஸ்வரன் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளேன். இது, தனியாக வாழும் பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். என்னுடைய புகாருக்கு போலீஸார் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்” என்றார்.
இந்தச் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…