நடிகர் விஷாலுக்கு அமலாபால் நன்றி!பாலியல் தொல்லை விவகாரம்…
நடிகை அமலாபால் பாலியல் தொல்லைக்கு எதிராக புகார் அளித்ததால், தம்மை வாழ்த்திய நடிகர் விஷாலுக்கு, நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடனப்பள்ளி உரிமையாளர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து புகாரளித்த நடிகை அமலா பாலுக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி கூறி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை அமலா பால், இது ஒவ்வொரு பெண்ணின் கடமை என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.