முதலில் சீனாவை தாங்கிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த வைரஸ் நோய் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்தியாவில் இந்த நோயின் தீவிரத்தை தடுக்கும் விதத்தில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதுகுறித்து நடிகை அனுஸ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்ததை இப்பொழுது செய்ய முடியாத நிலை.
நாம் காலத்தால் பிரிந்திருந்தாலும், புவியியல் ரீதியான தடையால் நாம் ஒன்றாக நிற்கிறோம். நமது பாதுகாப்புக்காக பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் போது எல்லோருக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. சின்னதோ, பெரியதோ அந்த கதாபாத்திரத்தை மனிதனாக மனிதத்துடன் செய்வோம்.’ என பதிவிட்டுள்ளார்.
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…