ஜவான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் அல்லு அர்ஜுன்..? வெளியான சீக்ரெட் தகவல்.!
இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, பிரியாமணி, பிரியாமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் என ஒரு தகவல் பரவி இருந்தது.
அவரை தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் ஜவான் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் பரவி உள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2-வில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில் , அதே கெட்டப்புடன் அல்லு அர்ஜுன் ஜவான் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜவான் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.